அன்புடன் ஒரு கோரிக்கை

வாசகர்களே உங்களுடைய ஆக்கபூர்வமான கருத்துக்களை இந்த தளத்தின் வளர்ச்சிக்காக எதிர்பார்க்கின்றேன்..சிறந்த நோக்கத்திற்கான எழுச்சியின் வளர்ச்சியில் உங்களது பங்களிப்பையும் தாருங்கள். இறைவன் அருள் செய்வான்

Thursday, June 18, 2015

அல்குர்ஆன் விடும் சவாலும் நோக்கமும்


இஸ்லாத்தின் அடிப்படையுமான மனித வர்க்கத்தின் வழிகாட்டியுமான  அல்குர்ஆனை அல்லாஹ் முன்வைத்தான். மனித வர்க்கத்தை வழிப்படுத்த கூடியதாக இறைவன் முன்வைத்த இந்த அல்குர்ஆன் இவ்வுலகில் தான்தோற்றி தனமாக தன் இஷ்ட்டப்படி  வாழமுனையும் நாத்திகர்கள் போன்றவர்களுக்கும் இஸ்லாத்தின் வழர்ச்சியும் சட்டங்களும் பிடிக்காத
ஏனையோரும் இஸ்லாத்தினை ஒழித்து கட்ட கங்கணம் கட்டி கொண்டு அழைகிறார்கள்.
அதற்காக குர் ஆணை பொய்பிக்க முனைந்தார்கள் ,முனைகிறார்கள் ,இனியும் முனைவார்கள் .ஆனால் இறைவன் உறுதியாக இவர்களுக்கு ஒரு பதிலடி கொடுக்கிறான்  

இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்தே போகும்” என்று கூறுவீராக (17:81)

இஸ்லாத்தை ஒழித்து கட்டநினைப்பவர்களே இஸ்லாத்தின் எதிரிகள் .அந்த எதிரிகள் என்னதான் சூழ்ச்சி செய்தாலும் இவர்கள்  இறுதியில் காண்பது தோல்வியாகத்தான் இருக்கும். அதையும் மீறி அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்றால் நிச்சயமாக அவர் இந்த இஸ்லாத்தை ஏற்று கொண்டவராக மாறி இருக்க கூடும்.(இஸ்லாத்தை ஏற்று கொண்டதன் மூலம் அவர் சுவர்க்கம் எனும் வெற்றியை அடைவார்). 

இந்த குர் ஆணை அன்று தொடக்கம் இன்றுவரை போய்ப்பிக்க முனைந்தவர்கள் பல பேர். இலக்கண பிழை என்றும் சரித்திர பிழை என்றும் கருத்துக்கள் பிழை என்றும் பல்லாயிரகணக்கான பிழைகளை கண்டு பிடிக்க முனைந்தார்கள் இன்று வரை முனைந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.ஆனாலும் என்ன இதுவரை யாரும் தங்கள் முயட்சியில் வெற்றிபெற்றதாக தெரியவில்லை. இறைவன் கொடுத்த வாக்குறுதி அப்படிப்பட்டது 

"நாமே அல்குரானை இறக்கினோம்.நாமே அதை பாதுகாப்போம்" (5:9)

அல்குரானை போய்ப்பிக்க முனைபவர்களை நோக்கி அல்லாஹ் ஒரு சவாலை விடுகிறான்.

ஏன் சவால்?
ஒருவரால் சவால் விடப்பட்டு அது தோற்கடிக்க பட்டால் அந்த நபர் தோல்வியடைந்தவர் .எனவே அல்லாஹ் ஒரு சவால் விடுகிறான் அது  தோற்கடிக்க பட்டால் இறைவன் தோற்றவனாகவும் அல்குர் ஆன் போய்யானதாகவும் இலகுவில் ஆகிவிடும் .எனவே அல்குர்ஆனோடு இறைவனையும் சேர்த்து பொய்ப்பிக்க இஸ்லாத்தின் எதிரிகளுக்கு ஒரு சவால் விடுகிறான். 

யாருக்கு சவால்?

இந்த குர்ஆனை பொய்ப்பிக்க முனையும் அனைவரையும் நோக்கியதாக இந்த சவால். அந்த பொய்ப்பிக்கும் குழுவில் இருக்கும் ஒருவர் அவருக்கு வேண்டிய உதவியாளர்களை எடுத்து கொள்ளலாம். அது இவ்வுலகை சார்ந்தவராகினும் சரி இன்று பேசப்படுகிற கண்ணுக்கு இதுவரை தென்படாத வேற்றுகிரகவாசியாக இருந்தாலும் இவர்களால் யாரையல்லாம் அழைக்க முடியுமா அவர்களை அழைத்து கொள்ளமுடியும் 

என்ன சவால்?
முதலில் "இக்குர்ஆணை போன்றதொன்றை கொண்டு  வருதல்"

"இக்குர் ஆணை போன்றதொன்றை கொண்டுவருவதற்காக மனிதர்களும் (கண்ணனுக்கு புலப்படாத) ஜின்களும் ஒன்று திரண்டாலும் இதை போன்றதொன்றை கொண்டு வர முடியாது.(எதுவரை என்றால்) அவர்களில் ஒருவர்  மற்றையவருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே" (17:88)

"இந்த குர்ஆனை போன்றதொன்றை உங்களால் கொண்டுவர முடிய வில்லையா? சரி சவாலின் கடினத்தன்மையை குறைத்து அடுத்தசவால்  

இரண்டாவது " இந்த குர்ஆணை போன்ற முழுமையான ஒன்றாக இல்லாமல் குறைந்தது பத்து அத்தியாயம் போதும் 

"(நபியான) இவர் இதை இட்டுகட்டி கூறுகிறார் என்று  அவர்கள் கூறுகிறார்களா?நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (நீங்கள் ) இட்டுக்கட்டி ,குர்ஆனில் உள்ளதை போன்று பத்து அத்தியாயங்களை கொண்டு வரட்டும்,உங்கள் துணைக்கு வேண்டியவர்களை அழைத்து கொள்ளுங்கள்(ஒருவரை தவிர ) அவன்தான் இறைவன்.அவனை தவிர. (11:13)

 பத்து ஆத்தியாயத்தை கூடஇவர்களால் கொண்டு வர முடியவில்லையா சரி சவாலை இன்னும் மிகவும் இலகுவாக்கி இந்த சவால் 

மூன்றாவது "பத்து அத்தியாயம் வேண்டாம் .சரி உங்களால் முடிந்தால் ஒரு அத்தியாயத்தையாவது கொண்டு வாருங்கள் 

"நமது அடியாரான (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு (அதில் ) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாத்தை கொண்டு வாருங்கள்.அல்லாஹ்வை தவிர உங்கள் ஏனைய உதவியாளர்களையும் அழைத்து கொள்ளுங்கள். (2:23)

ஒரு அத்தியாத்தை கொண்டு வரமுடியவில்லையா சரி உங்களுக்கு பாவப்பட்டு சவால் மிக மிக இலகுபடுத்த படுகிறது .இதையாவது செய்யட்டும்

நான்காவது "ஒரு அத்தியாயம் வேண்டாம் அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது போன்று ஒரு செய்தி ஒரே ஒரு செய்தி போதும்.

"அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்" (52:34) 

இதுவும் இவர்களால் செய்ய முடியாது. ஏனன்றால் இவர்களுக்கு அந்தளவு சக்தியில்லை.
 இந்த சவால்கல் அனைத்திலும் இந்த குரான் போன்ற என்றுதான் கூறுகிறான் .ஏனன்றால் இறைவனால் மனிதனுக்கு வளகப்பட்ட தெளிவான ஆதாரம் இது இது பொய்ப்பிக்கப்பட்டால் இஸ்லாமே பொய்யாகிவிடும் .எனவே இஸ்லாத்தினை அளிக்க நினைக்கும் எதிரிகளுக்கு முடிந்தால் குர்ஆணை பொய்பித்து காட்டுங்கள் என்று அல்லாஹ் சவால் விடுகிறான். 

சவாலை முகம்கொடுப்பவன் என்ன செய்வான் /எதை போன்ற ஒன்று ?

                                                  சவாலின் நோக்கம் 
அல்லாஹ் ஒரு சூழ்ச்சியை இந்த சவாலில் வைத்துள்ளான் அது என்னவென்று உங்களால் வியூகிக்க முடிகிறதா?
சொல்கிறேன்

அல்லாஹ் விட்டுள்ள சவாலை முகங்கொடுக்க முன்வந்தவன் அந்த சவாலை தெளிவாக புரிந்து கொள்ள எத்தனிப்பான்.அதாவது இந்த சவால் அனைத்தும் குர்ஆணை போல என்றுதான் கூறுகிறது .எனவே குரானை போன்ற ஒன்றை கொண்டு வர வேண்டும் என்றால் எதை கொண்டு வர வேண்டும் .என்று யோசிக்க ஆரம்பிப்பான். உதாரணமாக நான் ஒரு காரை தயாரித்து இதைபோன்ற  போன்ற ஒன்றை உருவாக்கி காட்டுங்கள் என்று நான் சவால் விட்டால் எதை என்று யோசிக்க மாட்டோம் ஏன் என்றால் ஒரு காரில் இருக்கும் எஞ்சின் .உறுதி ,வேகம் , வடிவம் , அழகு , சொகுசு ,தயாரிப்பு பாகம் , எரிபொருள் பாவிக்கும் திறன் , இவ்வாறு அதனுள் அந்த சவால் அடங்கியிருகிறது என்று அறிந்து கொள்வோம். 
அதை போன்று குரானிலும் இதை போன்ற ஒன்று என்று குறிப்பிடுகிறான் என்றால் இந்த குர்ஆனில் அடங்கியுள்ள விடயம் என்னவென்று சவாலை எதிர் கொள்ள தயாரானவன் ஆராய எத்தனிப்பான. எனவே குர்ஆனில் உண்மையான வரலாறு .இலக்கியம் ,இலக்கணம் , முன் அறிவு ,பின் அறிவு , மறைமுக அறிவு , மனிதனுக்கான இலட்சிய வார்த்தை இலக்குடைய வார்த்தை .சவால்களும் தீர்வுகளும் , விஞ்ஜானம் .பகுத்தறிவு சிந்தனை , தத்துவம் ,இசை ,ஓசை நயம் , உண்மைத்தன்மை , மனித அறிந்த அறிவு அறியா அறிவு , மனிதனால் விளக்கம் கொடுக்க முடிந்தவை ,விளக்கம் கொடுக்க முடியாதவை, இறைவனை நிரூபிக்கும் தன்மை , பல தெய்வங்களை மறுக்கும் அறிவு , மனிதனுடைய மனப்பாங்கு ,அதில் ஏற்படும் நோய்கள் அதற்கான தீர்வுகள்  இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகும் ஆராய ஆராய சம்சம் வற்றாத நீர் ஊற்று போல வந்து கொண்டே இருப்பதை அறிவான் ,எனவே சித்தம் தடுமாறுவான் , 

பின்னர் அல்குரானில் ஒவ்வொரு துறையாக ஆராய முனைவான் இலக்கியம் சார்ந்து ஆராய முற்படும்போது அதன் உயர்தன்மையை புரிந்து கொல்வான் எம்மால் இந்த அளவு முடியாது என்று ஏற்று கொள்வான்.பின்னர் இலக்கணம் சார்ந்து ஆராயும் போது எந்த வித இலக்கண பிழைகள் இல்லாததையும் அந்த இலக்கணங்களில் உள்ள நுண்ணறிவை கூட அவனால் புரிந்து கொள்ள முடியும் . எனவே இது முஹம்மது நபியினால் உருவாக்கப்பட்டதல்ல என்பதை உறுதியாக ஏற்று கொள்வான் .எனவே இப்போது முஹம்மத் நபி மீது இருந்த சந்தேகம் போகும் .

பின்னர் அடுத்தடுத்த துறைகள் ஒவ்வொன்றாக ஆராய முனையும் போதெல்லாம் இது இறைவானுடை வார்த்தைதான் என்பதை தெளிவாக அறிந்து கொள்வான். எனவே இப்போது அவனுடைய நிலை எப்படியிருக்கும் என்பதை நம்மால் இலகுவாக வியூகிக்க முடியும் .ஒன்று இஸ்லாத்தை ஏற்பான் அல்லது இதுதான் உண்மை மார்க்கம் என்று அன்றைய காபிர்கள் போல் தெளிவாக அறிந்தும் மறுப்பான்.ஏனன்றால் அவனுடைய 


2:6. நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்.

2:7. அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான் இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது; மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு.

2:8. இன்னும் மனிதர்களில் “நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்” என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.

2:9. (இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்; ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை; எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை.
2:10. அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது; அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்; மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு.

எஸ்.சிப்ராஜ்

0 comments:

Post a Comment