அன்புடன் ஒரு கோரிக்கை

வாசகர்களே உங்களுடைய ஆக்கபூர்வமான கருத்துக்களை இந்த தளத்தின் வளர்ச்சிக்காக எதிர்பார்க்கின்றேன்..சிறந்த நோக்கத்திற்கான எழுச்சியின் வளர்ச்சியில் உங்களது பங்களிப்பையும் தாருங்கள். இறைவன் அருள் செய்வான்

Friday, January 16, 2015

இஸ்லாத்தில் காதல்

அருகில் உள்ள படத்தினை பாருங்கள் ... இதை பார்த்தவுடன் எங்களுக்கு தெரிகிறது இருவரும் காதல் கொண்டவர்கள் என்று.
இந்த படத்தினையோ அல்லது இவர்களது செயல்களையோ  ஏற்றுக்கொள்வதாக இருந்தால் அது இஸ்லாத்தின் வரையறைக்கு உட்பட்டிருந்தால்தான் ஏற்போம் .இல்லை என்றால் புறக்கணித்து விடுவோம்.எனவே இவர்களை ஏற்பதா இல்லையா என்பதை இரு வினாக்களை தொடுத்து முடிவெடுத்து விடுகிறோம் ...

அதுதான் ..... இவர்கள் திருமணம் செய்தவர்களா?? இல்லையா??


ஏன் கேட்க தோன்றுகிறது?
மனிதனுக்கு சிறந்த ஒழுக்க விழுமியங்களை கற்று தருவது இஸ்லாம் அல்லாமல் வேறு ஏது? நாத்திகர்களை பொறுத்த வரை இந்த கேள்விக்கலாம் வாய்ப்பே இல்லை .ஏனன்றால் மரணத்துக்கு முன்பு அனுபவிப்பதை எல்லாம் அனுபவித்து போவோமே என்று எண்ணுபவர்கள் ..ஒழுக்க விழுமியங்களை சொன்னால் விலை என்ன ? என்று கேள்வி தொடுப்பவர்கள் .எனவே அவர்கள் இதல்லாம் கணக்கில் எடுப்பவர்கள் அல்லர்.

மதங்களை பொறுத்தவரை ஒழுக்கத்தை நிலை நாட்ட தனது கோட்பாடுகளை ஒழுக்க விழுமியங்கள் பால் நிலை கொள்ள செய்தவை .அந்த வகையில் இஸ்லாமும் ஒழுக்க விழுமியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது .

இந்த வகையில் அந்த இரண்டு கேள்விகளையும் கேட்போம்...

இஸ்லாம்  காதல் பற்றி தெளிவான சிந்தனைகளுடன் மனித உணர்வுகளுக்கு ஏற்ப சட்டத்தையும்கோட்பாடுகளையும் வைத்துள்ளது.

சாதாரண ஒருமுஸ்லிம்கூட அறிந்ததுதான் கணவன் மனைவிக்கிடையிலான காதல் கூடுமானது என்று ...

“அவர்களுடன் (பெண்களுடன்) சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்திருக்கலாம்.”   
                                    =========(அன்னிஸா 4:19)=========

ஆனால் இன்று தம்பதிகளாக வாழும் பலருக்கு தெரிவதில்லை அது இஸ்லாத்தில் தம்பதியர்களுக்கு மத்தியில் கடமியாக்க பட்ட ஒன்று என்று

"......அவன்தான் உங்களுக்கு துணைகளை உங்களிலிருந்தே ஏற்படுத்தினான், நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக, உங்கள் உள்ளங்களில் அன்பையும் கருணையையும் பெருகச் செய்தான்........."
                                ========(ஸூரா: அல்-ரூம் 30:21)=========.

இறைவன் கணவன் மனைவியை ஒருத்தருக்கொருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உருவாக்கியதாக கூறுவது எது என்பதை பாருங்கள் ...


"இந்த காதல் தானே "


ஒருவரை புரிந்துகொள்ளும் போது இருவருக்கிடையில் முரண்பாடும் பிரிவுகளும் ஏற்படுமா? இன்று அதிக தம்பதியர்கள் புரிந்துணர்வு இல்லாமல் தானே காதி நீதிமன்றங்களை நாடுகிறார்கள்.எனவேதான் சொல்கிறேன் கணவன் மனைவியர் அன்பு கொள்வதில் தவறில்லை என்று தெரிந்த இந்த உம்மத்துக்கு அது கட்டாயமாக்கப்பட்டது என்று தெரியவில்லை.

காதல் செய்யாதே என்று சொல்ல தெரிந்த இந்த சமூகத்துக்குதிருமணத்தின் பின் காதல் செய் அது கட்டாயமானது என்று சொல்ல தெரியவில்லை. நான் சொல்வது உண்மையா?பொய்யா? என்று இன்று பிரிந்து வாழும் தம்பதியனரிடமும் பெற்றோர்களிடமும் கேட்டு பாருங்கள்.இறைவன் தருகின்ற தீர்வு என்றும் பொய்யாகாது.

சரி நாம் அடுத்த விடயத்துக்கு வருவோம் . காதல் என்பது கணவன் மனைவிக்கிடையில் ஆகுமானது என்று பார்த்தோம் .அதை நாம் அறிந்தும் வைத்துள்ளோம். எமக்கு இருக்கும் பிரட்சினை தம்பதியர்களுக்கு மத்தியில் அல்லாத காதல்..

காதல் என்றாலே இன்று பலர் எரிச்சல் கொள்கின்றனர். காதல் ஹராம்(தடுக்கப்பட்டது) என்று உடனே பத்வாவும் கொடுத்து விடுகின்றனர்.. அவர்களை நோக்கியும் இந்த கட்டுரையை முன்வைக்கிறேன் .தயவு செய்து விரிவான ஒரு பார்வையின் பக்கமும் நடுநிலையான ஒரு பார்வையின் பக்கமும் வாருங்கள் ..

காதல் எனும் சொல்லுக்கு "அன்பு" என்னும் கருத்து போக நடைமுறையில் ஆசை , மோகம் , காமம் இந்த பொருளும் கொள்ளப்படுகிறது. எனவே இவற்றில் ஒவ்வொன்றைப்பற்றியும் இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் என்ன என்பதை ஆராய வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

தொடரும் .............
(உங்களது கருத்துக்களை எதிர்பார்கின்றேன்)




0 comments:

Post a Comment