Sunday, January 4, 2015
துவேசமும் இஸ்லாமிய கோட்பாடும்
"ஓர் மதத்துக்கோ அல்லது இன்னோர் கொள்கைக்கோ எதிராக போராட எதையும் செய்ய சொல்லும் மனப்பாங்கே" துவேசம் என்போம்.
இன்று உலகில் பலமதங்களும் அவற்றுக்கு என்று கொள்கைகளையும் கொண்டுள்ளது.கொள்கைகள் அற்றவனும் அதன் படி நடக்காதவனும் நிச்சயம் காட்டு மிராண்டியாகவோ அல்லது வேறு ஒரு மிருகமாகத்தான் இருக்க வேண்டும் .இதுதான் ஏனைய உயிர்களை விட்டும் மனிதனை பிரித்து கட்டுகிறது ..
பல்வேறு மனபாங்குகளையும் , சிந்தனைகளையும் கொண்டுள்ள மனிதன் தனக்கும் தன்னை சுற்றி உள்ளவர்களும் அமைதியாக வாழ நினைக்கின்றபோது தங்களுக்குள் ஒரு விதியினை தீர்மானிக்கின்றனர் .அது அந்த கூட்டத்தின் ஒட்டு மொத்த தீர்மானமாகவோ அல்லது அந்த தலைமையின் தீர்மானகவோ இருக்கலாம். எதோ ஒரு வகையில் மனிதன் தான் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்தால்தான் வாழ்க்கையினை சிறப்பாக கொண்டு போக முடியும் என்று தீர்மானிக்கிறான் .அதற்காகவே கொள்கைகளையும் கோட்பாடுகளையும் உருவாக்குகிறான் .
அது அவர்களின் தலைமுறை தலை முறையாக கடத்தப்படும் போது அது அவர்களின் கலாச்சாரமாகவும் பிற்பாடு நாகரீகமாகவும் தோற்றம் பெறுகிறது.
இப்போது எங்களால் புரிந்து கொள்ள கூடும் இந்த கொள்கை கோட்பாடுகளின் முக்கியத்துவத்தினையும் அதன் ஆணிவேரின் அடிப்பாகத்தையும். இவ்வாறு ஒரு கூட்டம் அல்ல .ஒரு குடும்பம் அல்ல ..உலகில் வாழக்கூடிய ஒவ்வொரு கூட்டமும் குடும்பமும் தங்களுக்கான விதிகளை நியமித்து அதன் படியே தன்னுடையதும் தன்னுடைய வருங்கால வாரிசுகளையும் நடை பாதை சென்றது ..
இதன் அடிப்படையில் தான் உலகின் பல கொள்கைகள் தோற்றம் பெற்றது..
இப்போது ஒரு கேள்வி ??
மனிதன் உருவாக்கிய கோட்பாடுகள் அவனுக்கான சிறந்த தீர்வினை வழங்கியதா??? என்பதுதான்.
பதில் ........... நிச்சயமாக இல்லை ..
நான் ஏற்கனவே சொன்னேன் ஒவ்வொரு மனிதனுடைய சிந்தனையும் கற்பனையும வித்யாசமானது என்று ..அதை தீர்மானிப்பது அவனது சூழலே ..எனவே குழுக்களாக வாழ்ந்த மனிதர்கள் தங்களுக்கான கோட்பாடுகளை அவர் அவர் சூழல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப உருவாக்கி கொண்டார்கள்..
இப்போது நமக்கு ஒன்று புரியவரும் .ஆம் ஒவ்வொரு குழுவினதும் கோட்பாடுகள் வித்யாசப்படும் என்பது. இன்னுமொன்றையும் யோசித்து பக்கத்தில் வைத்து கொள்ளுங்கள் ...அதாவது மனிதன் எப்போதும் ஒன்றாகவும் ஒரு குழுமமாகவும் இருக்கவே ஆசை படுவான் .. உண்மை அல்லவா ?????
தொடரும் ...................
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment