அன்புடன் ஒரு கோரிக்கை

வாசகர்களே உங்களுடைய ஆக்கபூர்வமான கருத்துக்களை இந்த தளத்தின் வளர்ச்சிக்காக எதிர்பார்க்கின்றேன்..சிறந்த நோக்கத்திற்கான எழுச்சியின் வளர்ச்சியில் உங்களது பங்களிப்பையும் தாருங்கள். இறைவன் அருள் செய்வான்

Wednesday, August 19, 2015

நாடாமன்ற தேர்தல் மதவெறியினை காட்டுகிறதா ?


நடை பெற்று முடிந்த தேர்தல் இலங்கையில் மதவெறிக்கு ஒரு போதுமே இடமில்லை என்றே நிரூபித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைக்கு இவ்வளவு ஆதரவு இருந்த போதும் எப்படி இவ்வாறு கூறுவது என்று நீங்கள் கேட்கலாம் .
ஆம் .. வெற்றிலைக்கு மக்கள் வாக்களித்தார்கள் ...அதற்கு அர்த்தம்
மத வெறியல்ல இலங்கை மக்களின் கட்சி பற்று மட்டுமே... இலங்கை வரலாற்றில் யானையும் வெற்றிலையும் மாறி மாறி ஆட்சியை பிடித்ததுதான் வரலாறு .. எனவே இதிலிருந்து புலப்படுவது இலங்கை மக்கள் - கட்சி ரீதியாக இரண்டாக பிரிந்துள்ளார்கள் என்பதையே .
ஒன்றை கவனிக்கவேண்டும் ..வெற்றிலையை அன்று முதல் இன்று வரை சிங்கள் மக்கள்தான் அதிகம் ஆதரிக்கிரார்கள்... ஐக்கிய தேசிய கட்சி இனி ஆட்சிக்கு வராது என்று எண்ணிய வேலை இன்று ஆட்சி அவர்களின் கைகளில் வந்துள்ளது என்றால் என்ன அர்த்தம்?காரணம் என்ன ?
1 . மகிந்த ராஜபக்ஸவின் மதவெறி காரணமாக இருக்கலாம் 
2 .ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி தேர்தலின் பின்னரான ஆட்சிமுறை பிடித்திருக்கலாம்.
3 .மகிந்த ராஜபக்சவின் ஆட்சி மக்களுக்கு வெறுத்து போனதாக இருக்கலாம்.
ஒரு வேலை ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி அவர்கள் வெல்வதற்கு சிறுபான்மையினர்தான் காரணம் என நீங்கள் கூறலாம் .. ஆனால் அந்த சிறுபான்மையினரில் தமிழர்கள் முலுமையாக இந்த தேர்தலில் பிறிந்து தனியாக போட்டியிட்டார்கள் . மேலும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைந்த பல அரசியற் கட்சிகள் தனித்தனியாகவே போடியிட்டுள்ளது ... இருந்தும்  ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு ஆதவு அதிகம் உள்ளது .. எனவே இது எதை காட்டுகிறது?
மேலும் மதவெறியை அடிப்படையாக கொண்ட பொதுபலசேனாவுக்கு இந்த தேர்தலில் கிடைக்கபெற்ற 2௦,௦௦௦  குறைவான வாக்குகள் இந்த நாட்டில் அவர்களுக்கு அங்கீகாரம் எந்தளவு என்று அறிய முடிகிறது இதன் மூலம் இலங்கை மக்கள் ஒரு போதும் மதவெறியை ஆதரிக்கவில்லை என்பது நிஜம்...
மேலும் வெற்றிலைக்கு கிடைத்த வாக்குகள் முஸ்லிம்களுக்கு எதிரான வாக்குகள் என்று நினைத்தால் வெற்றிலையில் கேட்ட முஸ்லிம் அரசியல் வாதிகளையிம் அதற்கு வாக்களித்த முஸ்லிம்களையும் எந்த இடத்தில் வைப்பது ...
நடை பெற்ற தேர்தல் எந்த கட்சி அதாவது  பரம்பரையாக ஆதரிக்கும் கட்சியை பார்த்தார்களே தவிர அந்த கட்சியினுடைய கொள்கைகளை பார்க்கவில்லை ..இதற்கு சிறந்த கொள்கைகளை கொண்ட ஜே வி பி இந்த தேர்தலில் தோற்றதே சாட்சி..
எது எப்படியோ இன்னும் ஐந்து வருடத்துக்கு ஒரு புதிய நம்பிக்கையை  எம் மனதில் விதைத்துள்ளோம்...அது நல்லபடியாக நடக்க இறைவனை பிரார்த்திப்போம் ..
புதிய ஆட்சியினை நோக்கிய இலங்கை மக்களுக்கு எழுச்சியின் சார்பான வார்த்துக்கள் . நாட்டினை எழுச்சியுற செய்வோம் ..

0 comments:

Post a Comment