அன்புடன் ஒரு கோரிக்கை

வாசகர்களே உங்களுடைய ஆக்கபூர்வமான கருத்துக்களை இந்த தளத்தின் வளர்ச்சிக்காக எதிர்பார்க்கின்றேன்..சிறந்த நோக்கத்திற்கான எழுச்சியின் வளர்ச்சியில் உங்களது பங்களிப்பையும் தாருங்கள். இறைவன் அருள் செய்வான்

Sunday, March 29, 2015

பாலியல் கல்வி (sex education)

பாலியல் கல்வி பற்றி பேசுவதற்கு முன் அது பற்றிய அறிமுகத்தை பார்த்து விட்டு வரலாம்

பாலியல் என்றால்?

பாலியல் என்பது ஆணோ, பெண்ணோ தன்னுடைய இனத்தின் (Sex)  சிந்தனைகள் (Thinking’s), உணர்வுகள் (Feelings),கலந்த தன்மையை வெளிபடுத்துவதாகும. அதாவது உடல்ரீதியான ஆசை மட்டும் எண்ணமாகும்.

இது பால்+இயல் என்றவாறு பிரித்து பார்த்தால் புரியும் .

பால் என்பது = ஆண் ,பெண் ஆகிய இரு வேறு பட்ட உடல் ,உள அமைப்பை கொண்ட தன்மை.


இயல் என்பது = செயல்பாடு இயக்கம் போன்றவாறு குறிப்பிடலாம். 

பாலியல் என்று இணைக்கும் போது ஆண் மற்றும் பெண் ஆகிய இரு வேறு பட்ட பாலாருக்கிடையிலான செயற்ப்பாடுகளை பற்றியது என்பதை விளங்க முடிகிறது.


சரி ஏன் அந்த வேறு பாடுகளை விளங்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம் ..அதற்கு முன் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் இவ்வாறு நீங்கள் தெரிந்து கொள்ள எத்தனிப்பதுதான் பாலியல் கல்வி.

கல்வி என்றால் என்ன?
ஒருவர் இந்த உலகில் பெறுகிற அறிவு, அனுபவம், ஆற்றல் ஆகியவற்றின் தொகுப்பே கல்வி எனப்படும். 

சரி இப்போது விடயத்திற்கு வருவோம்.

எதற்கு பாலியல் சம்பந்தமான அறிவு எமக்கு தேவை என்று நீங்கள் கேட்பீர்களேயானால் இதற்கு சாதகமான பதிலும் சொல்ல முடியும் பாதகமாக பதிலும் சொல்ல முடியும். 

பாலியல் கல்வி என்று சொல்கிற போது 

ஆண் விடலை அறிந்திருக்க வேண்டியவை

  • விந்து
  • தானாகவே வரும் விறப்புத்தன்மை
  • ஆணுறை அணியும் முறை
  • சுய இன்பம்

இளம் பெண் அறிந்துருக்க வேண்டியவை

  • மாதவிலக்கு, சரியாக தூய்மை செய்து கொள்ளும் முறை, அதன் பயமும் உடல் பலவீனமும்
  • மார்பக வளர்ச்சி
  • கருத்தரிக்கும் முறை, பாதுகாப்பு
  • பெண் கருத்தடை முறைகள்            (  frome: wikipedia )    

 இவை பற்றிய கல்விதான் பிரதானமாக கருதப்படுகிறது. ஆதாவது இது சம்மந்தமாக  ஒருவர் பெற்ற அறிவு, அனுபவம், ஆற்றல்... சம்மந்தமான அறிவை அறிதல். 

இன்று பல இடங்களில் பேசு பொருளாகவும் விவாத பொருளாகவும்மாறியுள்ள பாலியல் கல்வி தேவைதானா என்பதை சற்று அலசுவோம்.


உண்மையில் ஒரு மனிதர் பாலியல் பற்றிய அறிவினை பெற்றிருப்பது அவசியம்.அவ்வாறு அறிவு ஒருவனிடம் இல்லை என்றால் நிச்சயமாக அவன் பல இன்னல்களுக்கு உள்ளகத்தான் வரும். 

உதாரணமாக: மேலே சுட்டி காட்டியவாறு ஒரு ஆண் 
-விந்து பற்றிய அறிவு இல்லை என்றால் 
-குழந்தை பிறக்கும் முறை 
-ஆண்மை தன்மை 
-அது சுத்தமானதா?இல்லையா? 
-ஏன் அவசியம்?

இது போன்ற பல கேள்விகளுக்கு அவனால் விடையளிக்கவும் முடியாது. இது சம்மந்தமாக அவன் பிரச்சினைகளை எதிர் நோக்கும் போது அடுத்த கட்ட நகர்வினை அவனால் மேட்கொள்ளவும் முடியாது.


குழந்தை பாக்கியம் அற்ற ஒருவன் இது சம்மந்தமான அறிவு இல்லாத போது தன் மனைவி மீது குற்றம் சாட்டுகிறான். அவளை ஒதுக்கி விடுகிறான். ஆனால் உலகில் பெண்களை விட ஆண்களே மலட்டு தன்மை அதிகம் அதிகம் உள்ளனர் என்று அவன் அறிந்திருந்தால், குழந்தை உருவாக்கத்தில் தன்னுடைய விந்திட்கும் எந்தளவு பங்கிருக்கியது என்று அவன் அறிந்திருந்தால், அவன் அவளை விட்டு பிரியும் முன்பு தன்னில் உள்ள குறையை அறிந்து அதிலிருந்து எப்படி தன்னை பாது கொள்ள வேண்டும் என்றும் அறிந்திருப்பான்.

இஸ்லாமிய கருத்தோட்டத்தில் சொல்வதனால் ஓர் ஆணுடைய பாலுறுப்பில் இருந்து வெளியாகும் மணி,மதி,வதி ... இதைப்பற்றி ஒருவன் அறிந்திராவிட்டால் அவனது சுத்தம் எப்படி அமையும் அவனது வுழூ எப்படி அமையும் என்பது கேள்விக்குறிதான். 

எனவே ஒருவருக்கு பாலியல் அறிவு என்பது அவசியம்.. நபி (ஸல்) அவர்களிடமும் தமக்கு பாலியல் சம்மந்தமான சந்தேகங்ககள் வரும்போது அது சமந்தமாக கேட்டு அறிந்து கொண்டார்கள். 
உதாரணமாக=
-மணி வதி மதி சம்மந்தமாக 
-பெண்களின் மாதவிடாய் சம்மந்தமாக 
-உடல் உறவு சம்மந்தமாக 
-குழந்தை பிறத்தல் சம்மந்தமாக 

இவ்வாறு அடுக்கி கொண்டே போகலாம்.எனவே பாலியல் அறிவு என்பது அவசியமானதே.. அப்போது என்ன பிரட்சினை???

பிரட்சினை என்னவென்றால் இந்த பாலியல் அறிவை கற்பிப்பதிலும் கற்று கொள்வதிலுமே இருக்கிறது.


1-ஆண் பெண்ணிற்கு கற்பிப்பது
#-இயற்கையிலே ஓர் ஆண் தன்னுடைய அந்தங்க விடயத்தை பற்றி வெளியே சொல்லவும் மாட்டான்,அப்படித்தான் சொல்வதென்றாலும் அது தனக்கும் தன்னுடைய அந்தரங்கத்தை பற்றி அறிந்த ஒருவரிடமே கூறுவான்.அதாவது தன்னுடைய துணையிடம்.... இது அல்லாமல் வேறு ஒரு நபரிடம் அதை வெளிப்படுத்தும் போது அங்கு விபரீதங்ககள் தானாகவே எழும்.
 
-பெண் ஆணிற்கு கற்பிப்பது 
#-மேற்கூறிய விதி பெண்களுக்கும் அடங்கும் (குறிப்பு: சில வேலை ஓர் ஆண் ஆணிற்கும் பெண் பெண்ணிற்கும் கற்பிப்பதும் தடுக்க படவேண்டி வருகிறது ...இந்த ஓரின சேர்க்கை கேடுகெட்ட மிருக பிறவிகளால்)
 
-பயிற்சி 
#-கற்ற கல்வி தெளிவு பெறவும் மனதில் ஆழமாக பதியவும் கல்வியில் கையாளப்படும் முறைதான் கற்றவற்றை பயிட்சியாக செய்து பார்த்தல்..இப்படி ஒரு நிலை வந்தால் என்னகதி????

-கலப்பு முறை 
#-இந்த கல்வியை ஆணும் பெண்ணும் கலந்ததாக கற்பது. மேட்கத்தேயே கல்வி முறை காட்டும் வழிகாட்டல்தான் ஆணும் பெண்ணும் கலந்து குழுவாக கற்றலும் அதை பிரயோகித்தாலும்.சற்று யோசித்து பாருங்கள் அந்த கல்வி முறையினை இங்கே நிலை நாட்டினால் என்னவாகும் என்று. கற்றல் என்றாலும் பரவாயில்லை அதை பிரயோகிக்க முயற்சி செய்தால்???????? முயற்சி செய்தால் என்ன இதுதானேநடக்கிறது இந்த கல்வி முறையினால்.

நோக்கம்
#-பாலியல் அறிவு என்று ஆழமாக இறங்க போனால் அது பாலியல் ரீதியாக கணவன் மனைவிக்குள் ஒருவரை எப்படி தனக்கு சார்பாக வைத்திருப்பது என்பது வரை கொண்டு செல்லும்.... ஒரு பெண்ணின் உணர்வுகள் என்ன ? என்ன செய்தால் தன்னுடைய ஆசைக்கு கட்டுப்படுவாள்? இது போன்று அங்கு அதிகமாக ஆராய படுகின்றபோது அதை தவறாக பயன்படுத்துபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

காலம் 
#-அவ்வாறு நோக்கம் தவறி பிரயோகிக்கின்ற போது அது சமூக கேடாகவும்,அவனிலிருந்து வயது வித்யாசம் பாராது அவனது நண்பர்களுக்கும் பரவுகிறது ..காரணம் கேட்டால் பாலியல் அறிவாம் ... எனவே மாணவனாக இருக்கும் ஒருவனிடம் இந்த கல்வி செலுமே ஆனால் அந்த சமூகத்தின் நிலை என்ன ???? 

(இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்)

ஆகவே பாலியல் அறிவு என்பது அவசியம் ... அவை இங்கே சுட்டி காட்டப்பட்ட விளைவுகளில் இருந்து மீண்டு இருக்குமானால் அந்த கல்விக்கு எங்கும் தடை இருக்காது.. ஆனால் இன்று இருக்கும் பாலியல் கல்வி முறையும் அல்லது சாதாரன கல்வி முறையும் சமூக கேட்டை உண்டாக்குகிறதே தவிர நால்லது நடந்ததாக எங்கும் காணோம். 

மேற்சொன்னவை இஸ்லாத்தின் வரையறைகளுக்கும் அதன் நோக்கங்களிட்கும் உட்பட்டு சொல்லப்பட்டவை..எனவே அங்கு சுட்டிகாட்டப்பட்டது போன்று இல்லாமல் ஒரு கல்வி முறை இருக்குமே ஆனால் அது இஸ்லாமிய கல்வி முறைதான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை .... இஸ்லாமிய கல்வி சமூக சீர் கேட்டை என்றும் ஏற்படுத்தாது... நீங்கள் கொண்டு வரும் எந்த கல்விமுறையாக வேண்டுமானாலும் இருக்கட்டும் அது சமூக கேடுகளை கொண்டு வருமானால் அது இஸ்லாம் கூறிய கல்வியும் இல்லை கல்விமுறையும் இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள் ...

4 comments:

  1. நண்பரே உங்கள் கட்டுரை வரவேற்க்கதக்கது. வாழ்த்துக்கள். பாலியல் தெரிந்த உங்களுக்கு பாலினம் சார்ந்த அறியாமை நினைத்து வருந்துகிறேன். மாற்று பாலினத்தவரை பற்றிய (கேடு கெட்ட மிருக பிறவிகளால்) கடுஞ்சொலை தயவு செய்து நீக்கவும்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சரியான புரிதல் Hariharan siva

      Delete
    2. சரியான புரிதல் Hariharan siva

      Delete