அன்புடன் ஒரு கோரிக்கை

வாசகர்களே உங்களுடைய ஆக்கபூர்வமான கருத்துக்களை இந்த தளத்தின் வளர்ச்சிக்காக எதிர்பார்க்கின்றேன்..சிறந்த நோக்கத்திற்கான எழுச்சியின் வளர்ச்சியில் உங்களது பங்களிப்பையும் தாருங்கள். இறைவன் அருள் செய்வான்

Friday, April 17, 2015

முகத்தை மறைக்க அனுமதிக்க வேண்டும் -பிரித்தானிய உயர் நீதிபதி அறிவுறுத்தல்.



அண்மைக்காலமாக பிரித்தானியாவில் இஸ்லாம் எழுச்சி பெற்றுவரும் அதே வேலை. முஸ்லிம்களின் செயல்களின்பால் பிரித்தானிய அரசு தனது பார்வையை செலுத்தி வருகிறது.

அதே போன்று "முஸ்லிம் பெண்களுக்கு முகத்தை மறைக்க அனுமதிக்க வேண்டும்" என பிரித்தானிய உயர் நீதிபதி ஒருவர் கோரியுள்ளார்.


2013 ஆம் ஆண்டு கால கண்டங்களில் பிரித்தானியாவில் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாபிற்கு பலத்த எதிர்ப்புகள் சிலரால் எழுப்பப்பட்டது .மேலும் சென்ற வருடம் இது பற்றிய விவாதங்களும் தடை செய்ய கோரி அழுத்தங்களும் வந்தமை குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையிலேயே Lord Neuberger எனும்  பிரித்தானிய உச்ச நீதிமன்றத்தின் மூத்த உயர் நீதிபதியான இவர் கூறியதாவது

"நீதிமன்றங்களில் முஸ்லிம் பெண்கள் தங்களது ,முகத்தினை மறைத்து  நீதிமன்றத்தில் தோன்றுவதற்கு நிதிபதிகள் அனுமதியளிக்க வேண்டும்" என அறிவுரித்துள்ளார்.

"நீதிமன்றமும் நீதிபதியும் முகத்தை பார்ப்பதற்காக முகத்து காட்டுவது அவசியமான ஒன்றாக இருந்தது,ஆனாலும் அவர்களுடைய கலாச்சாரங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு மரியாதையளிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

வாதிகள் , பிரதிவாதிகள் மற்றும் சாட்சியாலர்களின் கலாசாரத்துக்கும் சமூககோட்பாட்டுக்கும் ஏற்ப அவர்களை புரிந்து கொண்டு நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும் எனும் நோக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.இது தொடர்பாக பல எதிர்ப்புக்குரல்கள் வந்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 

0 comments:

Post a Comment