நன்றி வெப் துனியா
லிஃப்டில் காதலியை அடித்த கால்பந்து வீரர் - அமெரிக்கப் பெண்ணியவாதிகள் கொதிப்பு
அமெரிக்காவில் பால்டிமோர் ரேவன்ஸ் (Baltimore Ravens - பால்டிமோ காக்கைகள்) எனும் பெயர் கொண்ட புட்பால் அணி பால்டிமோரில் உள்ளது. இது இங்கே ஐபிஎல்லில் ஆடும் சென்னை சூப்பர் கிங்க்ஸைப் போன்ற ஒரு அணி. கிரிக்கட்டை வழிநடத்த பி.சி.சி.ஐ. அமைப்பு இருப்பதுபோல், புட்பாலை வழிநடத்த என்.எப்.எல். (National Football League) எனும் அமைப்பு அமெரிக்காவில் உண்டு.
ரேவன்ஸ் அணியின் நட்சத்திர விளையாட்டு வீரர், ரே ரைஸ் (Ray Rice). இவர் அந்த அணியின் வெற்றிக்குக் காரணமான நட்சத்திர விளையாட்டு வீரர். சமீபத்தில் தன் காதலி ஜெனேய் (Janay Palmer) என்பவருடன் கஸினோ ஒன்றுக்குச் சூதாடச் சென்றார். அங்கே குடித்துவிட்டு லிப்டில் செல்கையில் காதலியிடம் எதையோ சொல்ல, அவர் பதிலுக்கு இவர் முகத்தில் துப்பியதுடன் நில்லாமல் ஒரு அறையும் அறைந்தார்.
ஆவேசமடைந்த ரே ரைஸ், காதலி முகத்தில் குத்துவிட்டு, கீழே தள்ளினார். இது அனைத்தும் லிப்டின் செக்யூரிட்டி காமிராவில் பதிவானது. அதன்பின் காவலர்கள் வந்து இருவரையும் விசாரித்தனர். இருவருக்கும் அடிபட்டிருந்தது. அதன்பின் காதலர்கள் சமாதானமாகிப் போக முடிவெடுத்து, போலிஸிடம் தெரிவித்துவிட்டார்கள். யாரும் வழக்குப் பதிவு செய்யவில்லை என்பதால் போலிஸும் கேஸை எடுக்கவில்லை. காதலர்கள் இருவரும் அதன்பின் திருமணம் செய்துகொண்டு தம்பதியும் ஆகிவிட்டார்கள்.
ஆனால் நட்சத்திர விளையாட்டு வீரருக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்ததால் அது பரபரப்பான செய்தியானது. ரே ரைஸுக்கு எந்தத் தண்டனையும் இல்லை என்பதை அறிந்த பெண்ணியவாதிகள் கொதிப்படைந்தார்கள். அவரைச் சட்டத்தின் மூலம் தண்டிக்க முடியாது என்பதால் என்.எப்.எல்லை அணுகி அவருக்குத் தண்டனை கொடுக்கக் கோரினார்கள்.
என்.எப்.எல்லும் ரே ரைஸை அழைத்து விசாரித்தது. வழக்கு பதிவாகாத கணவன் - மனைவி பிரச்சனை என்பதால் அவரை இரு ஆட்டங்களுக்கு மட்டுமே சஸ்பென்ட் செய்தது. அவரும் மனைவியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டதாகக் கூறினார்
இந்தச் செய்தி நேற்று வெளியானதும் இ.எஸ்.பி.என் உள்ளிட்ட ஊடகங்களில் பூகம்பமே வெடித்தது. "அது எப்படி மனைவியை அடிப்பவருக்கு 2 ஆட்டம் மட்டும் தான் தண்டனையா? அவர் மனைவியிடம் மன்னிப்பு கேட்டால் போதுமா? பொதுமக்களிடம் பகிரங்கமாக டிவியில் தோன்றி மன்னிப்பு கேட்கவேண்டாமா?" என பல பெண்ணுரிமையாளர்கள் இ.எஸ்.பி.என்னில் ஆவேசமாகப் பேசினார்கள்.
"என்னதான் மனைவி முதலில் அடித்திருந்தாலும் இவர் எப்படி திருப்பி அடிக்கலாம்?" என ஒருவர் ஆவேசமாகக் கேட்டார். அதன்பின் என்.எப்.எல். அதிகாரியைத் தொலைக்காட்சியில் அழைத்துப் பேட்டி எடுத்தார்கள்
"மனைவியை அடிப்பதுக்கு என்.எப்.எல்லில் 2 ஆட்டம் மட்டுமே சஸ்பெண்ட் என்பது, இம்மாதிரி தவறுகளை ஊக்குவிப்பது போல் ஆகாதா?" என சீரியசாக அவரிடம் கேட்டார்கள்.
அவருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அதை அடக்கிகொண்டு "2 ஆட்டம் மட்டுமே சஸ்பெண்ட் செய்வதால் இதை ஊக்குவிக்கிறோம் என யாரும் கருத மாட்டார்கள்" எனச் சொல்லிவிட்டு "கணவன் மனைவி பிரச்சனை. அதுவும் என்.எப்.எலுக்கு சம்பந்தம் இன்றி எங்கோ, பொது இடத்தில் நடந்த பிரச்சனை. இதற்கு இதுவே போதுமான தண்டனை" எனச் சொல்லிவிட்டார்.
இப்பிரச்சனையால் ரே ரைஸுக்கு செல்வாக்கு குறையும் எனப் பெண்ணியவாதிகள் எதிர்பார்க்க, பதிலுக்கு அவர் பெயர் பொறிக்கப்பட்ட டிசர்ட்டுகள் படுவேகமாக விற்றுத் தீர்கின்றன. இன்று நடைபெற்ற போட்டியில் அரங்கில் அவர் பெயரைச் சொன்னபோது கரகோஷத்தில் அரங்கே அதிர்ந்தது. இது பெண்ணியவாதிகளுக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதால் ரே ரைஸுக்கு எதிராக அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
-------------------------------------------------------
நன்றி : http://holyox.blogspot.com/2012/12/blog-post_28.html
பெண் குழந்தைகள் டீ கெட்டிலை வைத்து விளையாடுவதும், ஆண் குழந்தைகள் துப்பாக்கி பொம்மைகளை வைத்து விளையாடுவதும் தவறா?
ஆம் என்கிறது ஸ்வீடனின் அரசு துறை. காரணம் இதனால் பெண்கள் பெண்களாகவும், ஆண்கள் ஆண்களாகவும் வளர்கிறார்களாம். பாலின வேறுபாடு இப்படி சிறுபிள்ளை பிராயத்திலேயே கற்பிக்கபடுவது பாலின சமத்துவ கோட்பாடுக்குக்கு எதிராக இருக்கிறதாம். அதனால் இதை நிறுத்த சொல்லி ஸ்வீடனின் பொம்மை கம்பனிகளுக்கு ஸ்வீடன் அரசு உத்த்ரவு போட்டுள்ளது.
பொம்மை கம்பனிகளும் தம் விளம்பரங்களில் பையன்கள் பார்பி பொம்மைகளை வைத்து விளையாடுவது போலவும், பெண்கள் துப்பாக்கி பொம்மையை வைத்து சுடுவது போலவும் விளம்பரம் செய்து வருகின்றன.
சிரிச்சு முடிச்சாச்சா? இனி மேலே படிங்க.
ஸ்வீடனின் லிபரல் கோமாளிதனம் இத்துடன் நிற்கவில்லை. சென்ற வருடம் ஆண்கள் உட்கார்ந்து தான் சிறுநீர் கழிக்கவேண்டும் என ஒரு சட்டம் நிறைவேற இருந்தது ஸ்வீடனின் இடதுசாரி அமைப்பு ஒன்று ஆண்களுக்கு "ஆண் வரி" என ஒரு வரியை விதிக்க பரிந்துரை செய்தது. காரணம் ஆண்களால் நிகழும் வன்முறை, குற்றங்களுக்கு ஆண்கள் தானே பொறுப்பு?அப்புறம் அதுக்கு வரி விதிக்க வேண்டாமா?
பாலின சமத்துவத்தை வளர்க்க ஸ்வீடன் அரசு நடத்தும் இகாலியா என்ற பள்ளிகளில் "பாய்ஸ்" "கேர்ள்ஸ்" என மாணவர்கள் அழைக்காப்டுவது இல்லை. எல்லாரும் பட்டீஸ் என தான் அழைக்கபடுகிறார்கள். பாலின வேறுபாட்டை வளர்க்கும் சிண்ட்ரெல்லா, ஸ்னோ ஒயிட் கதைகள் ஒழிக்கபட்டுவிட்டன. அதுக்கு பதில் இரண்டு ஒட்டகசிவிங்கிகள் அனாதையாக்கபட்ட முதலை முட்டைகளை எடுத்து வளர்க்கும் கதைகள் சொல்லிதரபடுகின்றன.
இது தான் லிபரல்கள் வலியுறுத்தும் சமத்துவம். இதை நினைத்தால் கோபம் எல்லாம் வருவதில்லை. சிரிப்பு தான் வருது. அதனால் தான் பதிவுக்கு இந்த டைட்டில்.

0 comments:
Post a Comment