தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு முன்னர் தமிழ் நாட்டு தவ்ஹீத் ஜமாஅத் துக்கு எதிராக டூமியை இடிக்க கூறி நபிகளாரை கேலி செய்துவிட்டனராம் என கூறி ஆர்ப்பாட்டம் செய்தார்கள் சுன்னத் வல்ஜாமாதினர்
ஆனால் நபிகளாரை கேலிசெய்தது யார் என்று அந்த சுன்னத் வல்ஜமாதினரின் ஆர்ப்பாட்டத்தில் கீழே எடுத்த போட்டோக்கள் சுட்டிகாடுகிறது ...
இவர்கள் இஸ்லாத்தை காப்பவர்களா? இல்லை குழி தோண்டி
புதைப்பவர்களா?
அவர்கள் அன்று ஆர்ப்பாட்டம் செய்தார்களாம் என்று இன்று (2015/5/14) தமிழ்நாட்டு தவ்ஹீத் ஜமாத்தினர் தங்களுடைய பலத்தை காமிப்பதட்காக ஆர்ப்பாட்டம் செய்தார்கள் ..
ஆர்ப்பாட்டத்தில் ஆண்களும் பெண்களும் என்று பெரிய கூட்டத்தை காமித்து தங்களது பலத்தை நிரூபித்தனர் தமிழ் நாட்டு தவ்ஹீத் ஜாமதினர் .. மேல உள்ள இயக்க போராளிகள் எப்படி கலத்திலேயே மார்க்கத்தை குழி தோண்டி புதைத்தார்களோ ..அதே போன்று தமிழ்நாட்டு தவ்ஹீத் ஜமாத்தினர் இன்று குழி தோண்டி புதைத்துள்ளார்கள் ..
என்ன இடம் கொஞ்சம் வித்யாசம்.. அவர்களுடைய மார்க்கத்தை அவர்கள் போராட்ட காலத்திலேயே காட்டியது போன்று தமில்நாட்டு தவ்ஹீத் ஜமாத்தினர் களத்தில் எடுத்த போட்டோக்களை முகநூளில் பதிவு செய்து தங்களது மார்க்கம் இதுதான் என்று காட்டியுள்ளார்கள் ...
1.போர்களமும் போராட்ட களமும் ஒன்றா?
-தமிநாட்டு தவ்ஹீத் ஜாமத்தை நோக்கி பெண்களை ஏன் ஆர்ப்பட்டகலத்துகு இழுக்குறீர்கள் என்று கேட்டால் ..ஏன் அந்த கால சஹாபி பெண்மணிகள் போர்களத்துக்கு சென்று போராடவில்லையா என்று கேட்கிறார்கள் .. இவர்கள் கூறுவது சரிதான் ...ஆனால் ஒன்றோடு ஒன்றை ஒப்பிட்டு இவர்கள் மார்க்க தீர்ப்பு வழங்க வேண்டுமால் அவை ஒத்து போகவேண்டாமா ... அன்று போர்க்களத்தில் கடுமையாக போரிய பெண்மணிகளுக்கும் இன்று நடுவீதியில் நின்று கூச்சல் போடுவதும் ஒன்றாகுமா ?
அதற்காக பெண்களை வீட்டில் பூட்டி வையுங்கள் என்று கூறவில்லை ... பெண்கள் வெளியே வருவதற்கும் கால நேரம் உண்டு என்று அறிந்து கொள்ள வேண்டாமா? ஏன் பெண்கள் இதில் கலந்து கொள்ளாவிட்டால்தான் என்ன ? பலத்தை காட்ட ஆட்கள் குறைந்து விடும் போல ..
2.புகைப்படம் எடுக்க முடியுமா?
குறிப்பாக பெண்கள் கூட்டத்தை புகைப்படம் எடுக்க முடியுமா?
பெண்கள் கூட்டத்தில் பெண்களை தனித்து புகைப்படம் எடுக்க முடியுமா?
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்களின் போட்டோக்கள் முகநூலிலே தாரளாமாக பதிவேற்றுகிறார்கள் தமிழ்நாட்டு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் ..அதுவும் போதாது என்று சஹாபிய பெண்மணிகளின் வாரிசுகளை பாருங்கள் என்று வரிந்து கட்டுகிறார்கள்..
இந்த புகைப்படம் எடுத்தவர்களை பார்த்து நான் கேட்க விரும்புவது உங்களுடைய தங்கையை அக்காவை நான் புகைப்படம் எடுக்க கோரினால் அனுமதிப்பாரா?... அதை முகநூலிலே பதிவேற்றினால் சிரிப்பீர்களா ? கண்ணியமான முஸ்லிம் பெண்மணிகளை பாருங்கள் என்று கதை விட்டால் நீங்கள் அளஹம்துளில்லாஹ் சொல்வீர்களா?
முகநூளில் பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றுவது சரியா?
பெண்களே உங்களது புகைப்படங்களை பதிவேற்றாதீர்கள் அதை சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று முகநூல் முழுக்க அறிவுரையாக பரந்த வண்ணம் இருக்க ..இப்படி செய்தால் மட்டும் அதை தவறாக பயன்படுத்த மாட்டார்களா ?
முகநூளில் பதிவேற்றிய பெண்களின் போட்டோக்களை பார்த்து விட்டு பெண்களின் கவர்ச்சி ஆர்ப்பாட்டம் என்று இஸ்லாமிய சகோதர்களே மூளை கேட்டு விமர்சனம் செய்வது ஒரு புறம் இருக்க ..அந்த விமர்சனத்தை உருவாக்கி தந்தது யார் ?காரணம் யார் ? நீங்கள் என்ன மார்க்கத்தை வளர்க்கின்றீர்களே இல்லை காட்சிபடுத்தி கண்ணியத்தை போக்காட்டுகிரீர்களா ?
சுன்னத் வல்ஜாமாதினர் சிகட்டுகளை குடித்து மார்க்கத்தை அசிங்கப்படுத்தினார்கள் என்றால் நீங்கள் பெண்களை முகநூளில் காட்சிப்படுத்தி அசிங்கப்படுத்துகிரீர்கள் ... இதுதான் மார்க்கம் சொல்லும் முறையா ?
ஒரு இயக்கத்துக்கு எதிராக இன்னோர் இயக்கம் ஆர்ப்பாட்டம் செய்வது அசிங்கம் ஆபத்து என்று பொறுமையுடன் இருக்காமல் தங்களுடைய இயக்க வெறிகளை இவ்வாறு தீர்த்து கொள்வது முறையா என்ன ? நீங்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி இழிவுபடுத்தி கொள்வது உங்களுடைய இயக்கத்தை அல்ல இஸ்லாத்தை ...
இஸ்லாத்தினுள் பிரிவு எனும் விடயம் சந்திக்கு வந்தது மட்டுமின்றி அவை ஒன்றையொன்று கொலைவெறியுடன் பார்க்கக்கூடிய இயக்க வெறி என்றும் நிரூபித்துள்ளீர்கள் .. இயக்கங்கள் என்றாலே இஸ்லாத்திற்கு ஓர் அசிங்கம்தான் ... அந்த அசிங்கம் இப்போது இஸ்லாத்தை பார்த்து சந்திசிரிக்க வைத்துள்ளது ....
நடுநிலை இஸ்லாமிய தாயிக்களே இஸ்லாமிய இயக்கங்களை விட்டும் வெளியே வாருங்கள் ... அன்றைய நான்கு இமாம்கள் பிற்பாடு எவ்வாறு தக்லீத் சிந்தனையை கொண்டு வந்ததோ அதை விட படு மோசமாக ஆயுதம் ஏந்தி போறாடும் நாள் வெகுதூரம் இல்லை ... தங்களது கொளகைகளை காப்பாற்ற நடுரோட்டிட்கு வந்த இவர்கள் நாளை வெட்டு குத்து என்று போகாமல் இருக்க இறைவனே பாதுகாக்க வேண்டும் ....

0 comments:
Post a Comment