அன்புடன் ஒரு கோரிக்கை

வாசகர்களே உங்களுடைய ஆக்கபூர்வமான கருத்துக்களை இந்த தளத்தின் வளர்ச்சிக்காக எதிர்பார்க்கின்றேன்..சிறந்த நோக்கத்திற்கான எழுச்சியின் வளர்ச்சியில் உங்களது பங்களிப்பையும் தாருங்கள். இறைவன் அருள் செய்வான்

Saturday, April 18, 2015

ISIS இனரால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அடையாள அட்டை ...



isis இனரால் ஈராக் மற்றும் சிரியா பகுதிகளில் கைப்பற்றப்பட்ட எல்லைகளை அடிப்படையாக கொண்டுஅந்தபகுதிகளுக்கு ISLAMIC STATE (IS) எனபெயரிட்டு தாங்களாகவே அந்த நாட்டிற்கான கலிபாவினைஅறிவித்திருந்தனர் . 

அதையடுத்து  தங்களுக்கான நானயத்தினையும் அறிவிப்பு செய்தனர்
.இவ்வாறு அவர்களுடைய நடவடிக்கைகள் மூலம் புதிய நாட்டினை நோக்கி நகர்த்தி செல்கின்றனர் ..

அந்த வகையில் நேற்று........... ஆளுகைக்குள் உட்பட்டவர்களுக்கு புதிதான அடையாள அட்டையினை அறிமுகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது . நேற்று twitter தளத்தில் இந்த புதிய அடையாள அட்டையின் படம் ஒன்று வெளியாகியுள்ளது .
அந்த படத்தில் காணப்படும் அடையாள அட்டையின் பின்புறத்தில் الدولة الإسلامية (அத்தவ்ளத்துள் இஸ்லாமியா - இஸ்லாமிய நாடு ) என்று பெரிதாக பெயர்   பொறிக்கப்பட்டும் அதன் ஓரத்தில் பெயர் மற்றும் வழங்கப்பட திகதி மேலும் ப்ளட் க்ருப் +B என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது .மேலும் இந்த அட்டை
முப்பரிமாணம் கொண்டதாகவும் "சிப்" இணைக்கப் பட்டதுள்ளதாகவும் கூறப்படுகிறது . இவை பின் அட்டையின் தோற்றமாக இருந்தாலும் முன் அட்டையின் தோற்றம் எவ்வாறு என்ற தகவல் பெறப்படவில்லை .

மேலும் இவ்வாறு வெளியான இந்த அடையாளத்தை படத்தின் நம்பகத்தன்மை இதுவரை யாராலும் உறுதி செய்யப்படவும் இல்லை ஆய்வுக்குட்படுத்தவும் இல்லை என்பது குறிப்படத்தக்கது .


0 comments:

Post a Comment